உரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடபகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விலக்கக் கோரி தற்போது நாம் முன்னனெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட் டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் இதேபோன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்தார்.

வடபகுதியிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக் கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வவுனியா நகரசபை மண்டபத்தில இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண் டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செய லாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு பகுதியை மையப்படுத்தி சிங்கள உதவி அரசாங்க அதிபர் அமைக்கும் முயற்சி, பொதுமக் களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக்கோரியும் அரசாங்கத்தால் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணிப்பதிவு நடவடிக்கை மற்றும் சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இது தொடர்பில் அரசாங்கம் உரிய சடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் இந்த உண்ணவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில், தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா, பேராசிரியர் சிற்றம்பலம், டெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, விநோ நோகராதலிங்கம், வல்வெட் டித்துறை நகரசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் அமைப்பின் சார்பில் சித்தார்த்தன், தமிழர்விடுதலை கூட்டணி சார்பில் வீ. ஆனந்தசங்கரி,ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா அணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீதரன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் உட்பட பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply