தமிழகத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் பொதுவாக அமைதியாகவே நடந்தேறியிருக்கின்றன
பத்து மாநகராட்சிகள், 60 நகராட்சிகள் மற்றும் 259 நகர பஞ்சாயத்துக்களுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. சென்னையில் 48 சத வாக்குப் பதிவே நடைபெற்றிருக்கிறது, ஆனால் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் 72 சதம் வரையிலும், ஊராட்சி ஒன்றியங்களில் 75 சதம் அளவும் வாக்குகள் பதிவாயிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்துள்ளார்.
ஆங்காங்கே ஒரு சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆயினுங்கூட குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை என்றே தெரிகிறது. ஆனால் சென்னையில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக திமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அஇஅதிமுக நீங்கலாக மற்ற பல மேயர் வேட்பாளர்களும் அவ்வாறே குறைகூறுகின்றனர்.
பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதால் சென்னை மாநகரில் 9 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யரிடம் மனு ஒன்றினை அளித்தார்.
வெப் காமிரா மற்றும் வீடியோ பதிவு குறித்த உயர்நீதிமன்ற ஆணைகள் மீறப்பட்டிருப்பதாகப் புகார் கூறி தலைமை நீதிபதியிடமும் திமுக சார்பாக மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சில பிரச்சினைகள் ஆங்காங்கே இருந்தாலும் வாக்குப்பதிவு அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்த்தாக மாநிலத் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
வாக்களித்த பிறகு முதல்வர் ஜெயல்லிதா அ இஅதிமுக பெரும் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது ஆளும் அ இஅதிமுக வன்முறையில் இறங்கலாம், அதைத் தவிர்க்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டுமெனக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். மாநிலத்தில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 19 அன்று நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் நாள் நடைபெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply