மேல் மாகாண அமைச்சர் லான்சாவின் வீட்டுக்கு ஜனாதிபதி நேரில் விஜயம்

மேல்மாகாண சுற்றுலா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிமல் லன்சாவின் வீடு உட்பட நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று  தெரிவித்தார்.

மாகாண அமைச்சர் நிமல் லன்சாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக நீண்ட நேரம் அவருடன் கலந்துரையாடினார். ஆயுதங்கள், போதைப்பொருள் என்பன மறைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தேடுதல் நடத்த நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் வீட்டுக்கு வருகைதந்து சோதனை நடாத்திய விசேட அதிரடிப்படையினர் அடையாளஅட்டை, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் போன்றன இருக்கிறதா என்பது குறித்தே கேட்டறிந்தார்கள்.

இதனால் தான் தர்மசங்கட நிலைக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய நிமல் லான்சா, நியாயமான விசாரணை நடாத்துமாறும் கேட்டுக்கொண்டார். இச்சமயம் ஜனாதிபதி இது தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்படும் என்று கூறினார்.

எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் பிழையான தகவல்களைப் பரப்புவதால் இவ்வாறு ஏற்படும் நிலைமைகளின் மூலம் அற்பலாபம் பெறுவதற்கு அவர்கள் முயற்சி செய்வதாக அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

மேல்மாகாண அமைச்சர் நிமல் லான்சாவின் வீட்டிலும், நீர்கொழும்பிலும் விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் தேடுதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply