மூவரின் தூக்குத் தண்டனை உச்ச நீதிமன்றுக்கு மாற்றம் விசாரணையில் கலந்து கொள்ள வைகோ இன்று டில்லி விரைவு

மூவரின் தூக்குத் தண்டனை குறித்த விசாரணை உயர் நீதிமன் றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து இன்று நடக்கும் விசாரணையில் கலந்து கொள்வதற்காக வைகோ டில்லி செல்கிறார் என்று ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நீக்கி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, சிலரால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீது இன்று விசாரணை நடைபெறும் என்று, நீதிமன்றம் அறிவித்து இருந்தது. செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி வைகோ டில்லி சென்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தார். இந்த வழக்கு குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.

நீதிபதி சிங்வி விடுமுறையில் செல்வதால் இவ்வழக்கு 19 இன்று எடுத்துக் கொள்வதற்கு வாசூப்பு இல்லை என்றும் சில நாட்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்றும் 17 ஆம் திகதி அன்று டெல்லியில் இருந்து தகவல் சொல்லப்பட்டது.

கலிங்கப்பட்டியில் இருந்த வைகோவுக்கு நேற்று மாலை 4.30 மணி அளவில் இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ, நீதிபதி சந்திரமௌலி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என்று தகவல் கிடைத்தது.

உடனே, வைகோ தொலைபேசி மூலம் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியிடம் தொடர்பு கொண்டு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்த வழக்கில் அவசியம் நீங்கள் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதுவரை எந்தத் தேர்தலிலும் வைகோ வாக்கு அளிக்காமல் இருந்தது இல்லை. இன்று அவரது சேர்ந்த கிராமத்தில் வாக்கு அளிக்க வேண்டிய ஜனநாயகக் கடமை இருந்தாலும் மூன்று தமிழர் உயிரைக் காக்கும் முயற்சி அதைவிட முக்கியமானது எனக் கருதி, வைகோ டில்லி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply