இலங்கையில் அடுத்தாண்டுக்கான பாதுகாப்பு செலவு 1,471 கோடி ரூபாவினால் அதிகரிப்பு

2012 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பிரதமர் டி.எம்.ஜயவர்தனவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி 2 இலட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபா மொத்த செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினம் 22 ஆயிரத்து 993 கோடியே 30 இலட்சம் ரூபாவாகும்.கடந்த வருடம் பாதுகாப்புச் செலவினமாக 21 ஆயிரத்து 521 கோடியே 96 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அடுத்த வருடத்துக்கான ஆயிரத்து 471 கோடியே 33 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதி செயலகத்துக்கு 11 ஆயிரத்து 718 ஆயிரம் கோடியே 27 இலட்சத்து 300 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பௌத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சுக்கு 1773 கோடி ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 12 ஆயிரத்து 421 கோடியே 61 இலட்சத்து 74 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 10 ஆயிரத்து 457 கோடியே 13 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு 1 இலட்சத்து 141 கோடி 90 இலட்சம் ரூபாவும் தபால் சேவைகள் அமைச்சுக்கு 819 கோடியே 90 இலட்சம் ரூபாவும் நீதி அமைச்சுக்கு 423 கோடியே 73 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply