தீர்வு காணாவிடின் மக்கள் சட்டத்தை கையிலெடுப்பர் : ரணில்

சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. சட்டம், பொலிஸ், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காணாவிடின் பாராளுமன்றத்திற்கு எதிராக மக்கள் சட்டத்தை கையில் எடுப்பர் என்று ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் கவிழ்ந்ததன் பின்னர் சோமாலியாவில் இவ்வாறான நிலைமையே ஏற்பட்டது. எனினும் இங்கு அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற போதே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம், எதிர்க்கட்சி இவையிரண்டும் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஐ.தே.க. எம்.பி. யும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான ஜோன் அமரதுங்க நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருப்பது தொடர்பில் எடுத்தியம்பி சபையில் சமர்ப்பித்த பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply