அம்பாறையில் படை வீரர்களுக்கு 14 வீடுகள் ஜனாதிபதியால் கையளிப்பு
நமக்காக நாம் என்ற படை வீரர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நேற்று புதன்கிழமை அம்பாறையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவினால் 14 வீடுகள் கையளிக்கப்பட்டன.அம்பாறை திவிலான வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே திருகோணமலை, மட்டக்களப்பை சேர்ந்த படை வீரர்களுக்கே இவ்வாறு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
திவிலான வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைத்து இராணுவத்தை சேர்ந்த வீரர் கே.எம்.ஆர். ஜயவர்த்தனவிற்கு அதற்கான பத்திரங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
ஏனைய பிரதேசங்களில் மொத்தம் 14 வீடுகளுக்கான உரிமைகளும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. இத் திட்டத்தின் கீழ் இதுவரை 151 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்டி மாநகரில் 25 வீடுகளும், குருணாகல் மாவட்டத்தில் 27 வீடுகளும் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 36 வீடுகளும், மொனராகலை மாவட்டத்தில் 31 வீடுகளும், காலி மாவட்டத்தில் 32 வீடுகளும் அமைக்கப்பட்டு படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு ‘நமக்காக நாம்’ வீட்டுத் திட்டம் பாதுகாப்பு அமைச்சின் மகளிர் பிரிவின் கண்காணிப்பின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதோடு இந் நிதியத்திற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, சிரேஷ்ட அமைச்சர் பீ. தயாரத்ன, சரத் வீரசேகர எம்.பி., பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முப்படைத் தளபதிகளும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply