மனித உரிமை மாநாட்டில் சகல குற்றச்சாட்டுகளுக்கும் வெற்றிகரமாக பதிலளிக்கப்பட்டது : மகிந்த சமரசிங்க
சர்வதேச பாராளுமன்றத்தின் மனித உரிமை மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளுக்கு வெற்றிகரமாக பதிலளித்தாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பில், சர்வதேச பாராளுமன்றத்தின் மனிக் உரிமை குழுவிடம் செய்யப்பட்டிருந்த முறைப்பாடுகளுக்கே இவ்வாறான பதிலை வழங்கியதாகவும் இதன் போது, இலங்கை தொடர்பில் எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நியூயோர்க்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் மூன்றாவதுக் குழுக் கூட்டத்தில், இலங்கை சார்பில், அமைச்சர் மகிந்த சமரசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 26 ஆம் திகதி அமைச்சர் சமரசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர்நாயகம் பான்-கீ-மூனுக்கும் இடையில் விசேட பேச்சுவார்;த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
இலங்கையின் தற்போதை மனித உரிமை நிலவரங்களின் முன்னேற்றம் மற்றும் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து, பான்-கீ-மூனுக்கு, அமைச்சர் தெளிவுப்படுத்தவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply