வெலிஓயாவை முல்லைத்தீவுடன் இணைக்கக் கூடாது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வெலிஓயா பிரதேசத்தை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அரசாங்கத்துடன் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் அதிகமாக வாழும் வெலிஓயா பிரதேசத்தை முல்லேரியாவுடன் இணைப்பது பொருத்தமற்றது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவரை அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி நினைத்தால் இந்தப் பிரச்சினைகளுக்கு மணித்தியாலங்களுக்கு தீர்வு வழங்க முடியும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சம்பூர் போன்ற பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளவும் குடியேற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply