இந்திய உழவு இயந்திரங்களை பறிப்பது நியாயமானதல்ல : அடைக்கலநாதன்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெலிஓயா உதவகி அரசாங்க அதிபர் பிரிவிற்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவைகள் திணைக்களங்களிடமிருந்து தலா ஒவ்வொரு உழவு இயந்திம் கோரப்பட்டுள்ளது. இந்திய அரசினால் எம்மக்களுக்காக வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களை பறிப்பது எவ்வகையில் நியாயமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான செல்வம அடைக்கலநாதன் வினவினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கமநல அபிவிருத்தி (திருத்தம்) சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பின்னர் எமது விவசாயிகளின் நலன் மேம்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 10 கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
அங்குள்ள விவசõயிகளிடம் உழவு இயந்திரங்கள் இருந்தன. பிரச்சினைக்கு பின்னர் இவை யாவற்றையும் அவர்கள் ஆங்காங்கே விட்டுச் சென்று விட்டனர்.
இவ்வாறான நிலையில் இந்தியாவினால் கையளிக்கப்பட்ட உழவு இயந்திங்களை மீண்டும் பறிப்பது எவ்வகையில் நியாமானதாகும்.
கொக்கிளாய் பகுதியில் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படாமையினால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்க மீள்குடியேற்றம் செய்யப்பட்டால் மட்டுமே விளை நிலங்களும் மேம்படும்.
இதேவேளை கமநல சேவை திணைக்களத்தின் கட்டிடங்கள் பல பொலிஸõரின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது. விவசாய நிலங்கள் வயல்கள், தோட்டங்கள் இராணுவத்தின் கைகளிலேயே இருக்கின்றது. அக்காணிகளிலிருந்து அவர்களே வருமானத்தை ஈட்டுகின்றனர். மக்கள் கூலி வேலைக்கு கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறையில் கால்நடைக்கும் ஒரு ப
ங்கு இருக்கின்றது. எனினும் வன்னி பிரதேசத்தில கால் நடைகளை யார் யாரோ பிடித்து செல்கின்றனர். இலட்சக்கணக்கான மாடுகள் காடுகளில் இருக்கின்றன. இவற்றில் பல கொழுப்பு உள்ளிட்ட வெளி பிரதேசங்களுக்கு இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றன. எம் மக்கள் வளமுடன் வாழ்ந்தவர்கள் அவர்களின் கால்நடை தொலைந்து போவதனால் அவர்கள் மனந் நொந்து போகின்றனர். இவ்வாறான நிலையில் விவசாயிகளை பாதுகாக்காவிடின் நாடு பட்டினியை எதிர்நோக்கும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply