சம்பூர் மக்களுக்கு சொந்த நிலத்திற்குப் பதிலாக ஒரு சந்தர்ப்பம் : திருகோணமலை மாவட்ட செயலகம்

சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ள குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 பேர்ச்சஸ் காணியும் அரை நிரந்தர வீடு ஒன்றும் ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று திருகோணமலை மாவட்ட செயலகம் ‘சம்பூர் பிரதேசத்திலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான அன்பான வேண்டுகோள்” என்ற தலைப்பிலான அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அரசினாலும் பிரதேச செயலாளரினாலும் உங்களை மீளக்குடியமர்த்துவதற்காக சீதனவெளி, வேம்படித் தோட்டம், இளக்கந்தை, வீரமாநகர் வடக்கு, தங்கபுரம் குறவன்வெட்டுவான் ஆகிய பகுதிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களிலேயே காணி வழங்கப்படவுள்ளது. இக்கிராமங்களில் குடியிருக்க விருப்பம் தெரிவிப்பவர்கள் வரிசைக் கிரமப்படி தெரிவு செய்யப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

29.01.2008 ஆம் திகதியிலான அதிவிஷேட வர்த்தமானி மூலம் விஷேட அபிவிருத்தி வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலேயே மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளது.

25.10.2011 ஆம் திகதிக்குள் மீளக்குடியமர விருப்பம் தெரிவிப்போர் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களில் ஒன்று இரண்டு மூன்று என்னும் அடிப்படையில் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ள பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply