தீமை ஒழிந்து, இருள் மறைந்து சகலரது வாழ்விலும் சுபீட்சத்துக்கான வழி பிறக்கட்டும் : ஆறுமுகன் தொண்டமான்
தீமை ஒழிந்து, இருள் மறைந்து ஒளியின் உதயத்தை எடுத்துக்காட்டுகின்ற தீபாவளி சகலரது வாழ்விலும் நன்மை பிறக்கும் நியதியை பிரதிபலிக்க வேண்டும். இந்த வருட தீபாவளி பண்டிகையானது மலையக மக்களை பொறுத்தமட்டில் ஒருவிசேட தீபாவளியாகவே அமைகிறதென இ. தொ. கா. பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள தீபத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இந்நாட்டில் நாம் இதுவரையிலும் முகம் கொடுத்து வந்த பல்வேறு பிரச்சினைகளை கடந்து வந்திருக் கின்றோம். இன்று எமது எதிர்கால பிரகாசமான விடிவுக்கும், விமோ சனத்திற்கும் நல்லதொரு வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கை எமக்கு ண்டு. பொருளாதார மேம்பாட்டு க்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை இ. தொ. கா வகுத்துள்ளது.
மலையக மக்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் ஆகியோ ரின் வாழ்க்கை பிரகாசம் அடைய வேண் டும் என்பதே எமது குறிக் கோளாகும். மலையக சமுதாயம் தோட்டத் தொழி லாளர்களை மாத்தி ரமல்ல பல் வேறு துறைகளில் பணி யாற்றுவோ ரும் ஏனைய மக்களைப் போல் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்.
நாட்டின் சமாதானத்தை நோக்கிய சிந்தனைகளுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கை கொண்டுள்ள மலையக மக்களை எண்ணி நாள் பெருமிதம் அடைகின் றேன்.
இத்தீபாவளி நாம் இன்னும் பல படிகளை கடந்து மேம்பாடு அடை வதற்கு தீபத் திருநாள் பிரகாசமான வழியை காட்டுமெ ன்றதில் எமக்கு சந்தேகமில்லை.
தீபத்திருநாளை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது மங்களகரமான தீபத் திருநாள் வாழ்த்துக்களை இத்திருநாளில் தெரிவித்துக் கொள்கின்றேனென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவி த்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply