ஜனாதிபதியும் அவரது சகோதரர்களுமே பொருளாதார முடிவுகளை எடுக்கின்றனர்
ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைக்குஉரிய பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனைகளை உள்ளடக்கி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸவும், அவரது சகோதரர்களுமே உண்மையாக பொருளாதார முடிவுகளை எடுக்கிறார்கள் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வோஷிங்ரனுக்கு அனுப்பிய கேபிள் தபால் விக்கிலீக்ஸில் கசிந்துள்ளது.
இவர்களுடன் தொடர்புகொண்ட வர்த்தகத் தலைவர்களும், புத்திஜீவிகளும் இந்தப் பொருளாதார முடிவுகளை சரியானவை என ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னர் இவை இடைச்செருகல் புகமுடியாத உறுதியான முடிவுகளாகி விடுகின்றன என்றும் மேற்படி தூதரகம் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுக்கமான ஒரு வட்டத்தின் மூலமாகவே கேந்திர முடிவு எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாலும், அவரது இரு சகோதரர்களாலுமே கேந்திர முடிவு எடுக்கப்படுகிறது. தெளிவான ஒரு நிலைப்பாட்டுக்கு அப்பால் முடிவு எடுக்கப்படுகிறது என்றும் அதில் அது விளக்கியுள்ளது.இலங்கையில் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்புகள் ஆகியவை குறித்து இத்தூதரகக் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகப் பிரதித் தலைமை அதிகாரி வெலரிக் பௌலரால் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி எழுதப்பட்டு, இரகசியம் எனத் தலைப்பிடப்பட்டு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் குறிப்பு என அமெரிக்கத் தூதுவர் பெற்றீஸியா ஏ. புடினிஸ் உப தலைப்பு இட்டு தமது கருத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஈகோவொவ் (அமைப்பு) இதில் அநேக உள்ளூர் வர்த்தக தலைவர்களுக்கும் நல்ல தொடர்பு உண்டு. இலங்கையின் தனித்துவமான பொருளாதார முடிவால் இவர்கள் பயனடைவார்கள்” என தூதுவர் தெரிவித்துள்ளார்.கடந்தகால நடவடிக்கை குறித்தும் தூதுவர் பெற்றீஸியா இதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
முன்னர் முடிவு எடுப்பது தொடர்பான பூர்வாங்க சம்பிரதாயபூர்வமான நடைமுறை நிதியமைச்சால் அறிவிக்கப்படும். இதில் வரிசைக்கிரமமான அமைச்சுகளினதும், தனியார்துறையினதும் ஆலோசனைகளும் இதற்குப் பெறப்படும்.இலங்கை அரசிடம் நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சுகள் உள்ளன. அநேக அமைச்சர்கள் முழுமையாக அரசியல் காரணங்களுக்காகவே அலுவலகங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஓர் அமைச்சு பொருளாதாரக் கொள்கையை மாற்றத் திட்டமிடுமானால், அது முதன்முதலாக நிதியமைச்சில் இயங்கும் தேசிய திட்ட ஆணைக் குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அது தொடர்பாக நிதியமைச்சிடம் பூர்வாங்க வேண்டுகோள் விடுக்கப்படும். எனினும், இப்போது ஜனாதிபதி ராஜபக்ஷ தாமே நிதியமைச்சர்போல செயல்படுகிறார். நிதிச் செயலாளர் ஜயசுந்தரவின் செல்வாக்கு ஜனாதிபதியை எட்டும் நிலையில் இல்லை. ஜனாதிபதியே நிதியமைச்சை நடத்துகிறார். தாம் பதவிக்கு வந்ததுமுதல் அவரே பொருளாதாரக்கொள்கையை மாற்றியுள்ளார்.மற்றவர்கள் குறிப்பாக மத்திய வங்கி ஆளுநர் கப்ரேல், ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த வட்டத்துக்குள் அடங்குவர். இவ்வாறு பெற்றீஸியா தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply