இலங்கை தொடர்பில் அறிய முற்படும் எந்த தரப்புடனும் பேச்சு நடத்த தயார் அவுஸ்திரேலிய பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் அறிந்து கொள்ள முற்படும் எந்தத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள் வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி நேற்றைய தினம் அந்நாட்டின் பிரதமர் ஜுலியா கிளார்ட்டுடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அவதூறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுக்களாகும் என்பதை அவுஸ்திரேலிய பிரதமருக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது தொடர்பில் அறிய முற்படுவோருடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஜனநாயக மற்றும் இராஜதந்திர முறையாகும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிளார்ட்டுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்றைய தினம் பேர்த் நகரிலுள்ள பேன் பெஸிபிக் ஹோட்டலில் நடைபெற் றுள்ளது.
இச்சந்திப்பின் போது இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரமருக்குத் தெளிவுபடுத்தியுள்ள ஜனதிபதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் கிடைத்ததும் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பின் சில உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழ்வதுடன் அவர்கள் அந்த நாட்டின் வாக்குரிமைகளைக் கொண்டுள்ளதுடன் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அந்த நிதியினை இலங்கைக்கு எதிராக உபயோகப்படுத்து கின்றனர் எனவும் அவுஸ்திரேலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து இதன் போது இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத னோடிணைந்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப் பட்டுள்ளன.
உயர் கல்வித்துறை தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடி யுள்ளனர். இது தமக்கு நெருக்கமானதொரு துறையாகுமென இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதுடன் இரு நாடுகளினதும் கல்வித்துறை மேம் பாடு சம்பந்தமாக இரு நாட்டுத் தலை வர்களும் கவனம் செலுத்தினர்.
பொதுநலவாய மறுசீரமைப்பு தொடர்பில் இதன் போது அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெளிவுபடுத்தினார். இதன் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இது விடயத்தில் ஆராய்வதற்கு சிறிது காலம் அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதமான புலம் பெயர்வுகளைத் தடுப்பதில் இலங்கை அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப் புக்களுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் இதன் போது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
சுமுகமானதாக நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் நிறைவு இரு நாடுகளுக்கு மிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியுடன் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அவுஸ்தி ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திசர சமரசிங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply