அமெரிக்க பேச்சுக்கள் குறித்து கூட்டமைப்பு எம்.பி.க்கள் திருப்தி

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும் பயன்தருபவையாகவும் அமைந்துள்ளன என்று த.தே.கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நான்கு எம்.பி.க்கள் கடந்த மூன்று தினங்களாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய எம்.பிக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
ரொபட் ஓ பிளேக்கையும் இவர்கள் சந்தித்திருந்தனர். சந்திப்புக்கள் ஆரோக்கியமானவையாகவும், பயனுள்ளவையாகவும், அமைந்திருந்தன எனவும் இது குறித்து அறிக்கைவாயிலாக மக்களுக்கு அறியத்தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply