இலங்கையின் நீதியமைச்சர் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
நியூயோர்க் நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதன் தலைவரான நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
ஆசிய, ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் 31 ஆம் திகதி திங்கள்கிழமை அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடக்கவுரை ஆற்றுவார். எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை சர்வதேச சட்ட மன்றத்தின் இணை அனுசணையுடனான இக் கூட்டம் அங்கு நடைபெறும். சமகால சட்டச் சிக்கல்கள் பற்றி அதில் விரிவாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply