அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கையளித்த இரகசிய ஆவணம்

இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாகத் தெரியவருகின்றது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வோஷிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான போதும், சந்திப்பு இடம் பெற்றதாகத் தகவல் இல்லை.

இந்தநிலையில் இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக ஹிலாரி கிளின்ரன், கூட்ட மைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதைக் கை விட்டுள்ளதாகக் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மற்றும் அரசியல் விவ காரங்களுக்கான கீழ் நிலைச் செயலர் வெட்டி சேர்மன் ஆகியோரைக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த கொள்கை வகுப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 பக்க ஆவ ணம் ஒன்றை கையளித்துள்ளதா அறியவருகின்றது.

மனிதஉரிமை மீறல்கள், மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய இந்த ஆவணத்தை கருத்தில் கொண்டு இலங்கை அரசின் மீது அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply