கனடாவின் இலங்கை விரோத முயற்சிகள் முறியடிப்பு: ஜீ.எல்.பீரிஸ்

கனடாவின் இலங்கை விரோத முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சில விடுதலைப் புலி ஆதரவு சக்திகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மூன்று முனைகளில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் கடுமையாக விமர்சனம் செய்ததாக அமைச்சர் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை உள்விவகாரப் பிரச்சினையை அரசியல்மயப்படுத்த கனடா முனைப்பு காட்டியதாக் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply