தந்தை செல்வாவின் சிலை உடைப்புக்கு சிறீ-ரெலோ கடும் கண்டனம்
திருகோணமலை நகரிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் இருந்த தந்தை செல்வாவின் சிலை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. யுத்த முழுமையாக முடிவடைந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்னும் இது போன்ற அரசியல் நாகரிகம் அற்ற செயல்கள் நிகழ்வதை வன்மையாக கண்டிப்பதாக சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ-ரெலோ – தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.
திருமலை நகரிலிருந்த அமரர் ஜே.வி. செல்வநாயகத்தின் சிலை இனந்தெரியாத விசமதாரிகளால் உடைக்கப்பட்டமைக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து சிறீ-ரெலோ தலைவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
தமிழ்த் சான்றோர்களதும் அரசியல் தலைவர்களில் சிலைகள் தமிழர் தாயகத்தில் உடைக்கப்படுவது கடந்த அரை நூற்றாண்டாக நிகழ்ந்து வரும் அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.
சிறுபான்மை இனங்களின் சுய கெளரவத்தை உரசிப்பார்க்கும் இவ்வாறான நடவடிகைகள் இலங்கையின் எதிர்கால அரசியலை இன்னும் சீரழிவு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியன.
கால் நூற்றாண்டு காலம் நீண்ட கொடிய யுத்த முடிவின் பின்னால், சமாதான சக வாழ்வைக் கோரி நிற்கும் தமிழ் மக்கள் இவ்வாறான அருவருக்கத்தக்க அரசியல் விசமத்தனங்களால் மிக மோசமாக விசனம் அடைவார்கள் என்பதை இடித்துரைக்க விரும்புகிறோம்.
மூலம்/ஆக்கம் : TELOnews, ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply