பேர்த் நகரிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நாடு திரும்பினர். நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினரும் நாடு திரும்பினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களின் அவுஸ்திரேலிய விஜயமானது சர்வதேசத்திற்கு இலங்கையின் உண்மை நிலையை தெளிவுபடுத்தவும் நாடுகளுக் கிடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தவும் சிறந்த தருணமாக அமைந்திருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த சர்வதேச நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமை யிலான இலங்கை தூதுக்குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் நாட்டி ற்கு பல்வேறு துறைசார்ந்த நன்மைகளை பெற்றுத்தந்துள்ளன. அத்துடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நாடுகளுக்கிடை யிலான நட்புறவுகளையும் நல்லெண்ணத்தை யும் வலுப்படுத்திக்கொள்ள உறுதுணையாக அமைந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், பாகிஸ்தான், மலேசியா, மொரீஷிய நாட்டுப் பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உகண்டா, கென்யா, நைபீரியா, சமீபியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்களையும் இந்திய உப ஜனாதிபதியையும் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது அபிவிருத்தி வறுமையொழிப்பு, உயர் கல்வி உள்ளிட்ட துறைகளில் முக் கிய கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை பங்களாதேஷ் பிரதமருடனான சந்திப்பின் போது இலங்கையில் 2013 இல் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பங்களாதேஷின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமருடனான பேச்சுவார்த்தை யின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகள், முதலீட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலை வர்கள் மாநாட்டின் சமகாலத்தில் இல ங்கை ஜனாதிபதிக்கு எதிராக சிட்னியின் வதியும் அருணாசலம் ஜெகதீஷ்வரனால் மெல்பன் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. அவுஸ்திரேலிய அரசாங்கம் அதனை நிராகரித்தமை இந்த விஜயத்தில் குறிப்பிடக்கூடிய ஒரு முக்கிய விடயமாகும்.
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை யர்களை சந்தித்த ஜனாதிபதிக்கு அம்மக் களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச வர்த்தக சமூகத்தினரையும் ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது 2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியை இலங்கையில் நடத்துவது தொடர்பில் அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு அந்நாட்டு ஊடகங்கள் முக்கியத் துவமளித்தன.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் நிறைவில் மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்தி ரேலிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன் 2013 இல் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கான விசேட அழைப்பினை சர்வதேச தலைவர்களுக்கு விடுத்தார். அதனை அத்தலைவர்கள் கெளரவமாக ஏற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதியுடன் இத்தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார் முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, பிரியங்கர ஜய ரத்ன, பிரதியமைச்சர் நியோமல் பெரேரா, சஜின் வாஸ் குணவர்தன எம்.பி, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply