புலிகளின் சொத்துக்களைத் தன்னகப்படுத்தும் சட்டமூலத்தை அரசு கொண்டுவர வேண்டும் : ரணில்

சிங்கள வர்த்தகர்களது தொழில் நிறுவனங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சட்ட மூலத்தை விடுத்து, சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் சொத்துக்களை அரசாங்கம் தன்னகப்படுத்தும் சட்ட மூலமொன்றை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற செயலமர்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச ரீதியிலான விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அந்தச் சொத்துக்களை அரசாங்கம் தன்னகப்படுத்தி யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் பெற்றோல் நிலையங்கள் இருக்கின்றன என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் குமரன் பத்மநாதன் என்கிற கே.பிக்கு 600 அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பில் அசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். வன்னி மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் கே.பியிடமே இருக்கின்றன. அரச மாளிகையில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் கே.பியிடமுள்ள அந்த சொத்துக்கள் அனைத்தையும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி வன்னித் தமிழ் மக்களிடத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.

“எரிபொருள் விலைகளை அதிகரித்திருக்கின்றன. மஹிந்த சிந்தனை பொது மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது. அது மட்டுமல்லாது சாதாரண நிலையிலிருந்து முன்னேறப் பாடுபடும் மக்களுக்கு இடையூறாகவும் அரசு விளங்குகின்றது” என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply