இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தமை குறித்து பொதுநலவாய அமைப்பு மீது விமர்சனம்
இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமை குறித்து பொதுநலவாய அமைப்பின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளுடன் முரண்பட்டுக் காணப்படுவதுடன், பொதுநலவாய அமைப்பின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியுமாகும். இவ்வாறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சுட்டிக்காட்டி நியூஸிலாந்து ஊடகமான ஸ்கோப் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை 2013 இல் இலங்கையில் நடத்துவது தொடர்பான பொருத்தப்பாடுகளை மீள் ஆராய்வதில்லை என அந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.
இத் தீர்மானமானது பொதுநலவாய அமைப்பின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளுடன் முரண்பட்டுக் காணப்படுவதுடன் அவ் அமைப்பின் வரலாற்றில் இத் தீர்மானமானது அதன் தரம் தாழ்ந்த விடயமாகவும் உள்ளது.
2009இல் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்புத் தலைவர் களின் உச்சி மாநாட்டில் இலங்கையில் 2011 இல் இம் மாநாட்டை வைப்பது என்கின்ற தீர்மானம் பிற்போடப்பட்டு 2013இல் மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டிலிருந்த இலங்கையின் நிலைப்பாட்டில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அனைத்துலகின் கவனம் தற்போது அதிகரித்துள்ளது.
ஆனால் இதனை ஏற்று இக்குற்றச் சாட்டுத் தொடர்பாக நேர்மையான நீதியான முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் இதனை ஏற்க மறுத்துள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பெறப்பட்ட நம்பகத்தன்மையான சாட்சியங்களை அடிப்படை யாகக் கொண்டு சுயாதீனமான அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக இலங்கையின் உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணை முயற்சிகள் போதியளவு நம்பகத்தன்மையானதாக இல்லாமையாலேயே இவ்வாறான அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எது எவ்வாறிருப்பினும் மிகப் பரவலாக இலங்கை அரசாங்கம் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்திலெடுக்கின்ற விடயத்தில் பொதுநலவாய அமைப்பு பராமுகமாக நடந்து கொண்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளில் சில தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன.
2013 இல் இடம்பெற வுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை இலங்கை யில் வைப்பதற்கு அனுமதித்தமை இலங்கை இவ்வமைப்பின் உறுப்பு நாடாக தொடர்ந்தும் நிலைத்திருக்க அனுமதியளித் தமை போன்ற விடயங்களின் மூலம் பொதுநலவாய அமைப் பானது தனது எதிர்காலப் போக்கை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய அமைப்பு தனது வரலாற்றில் தென்னாபிரிக்காவின் இன ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பைக் காட்டியது போன்று இனி வருங்காலங்களில் மனித உரிமை செயற்பாட்டில் தான் எவ்வாறான தீர்வுகளை எடுக்கவுள்ளதை தற்போதைய பேர்த் மாநாட்டில் இலங்கை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply