இறுதிப் போரின்போது அரச படையினர் பல தவறுகளைச் செய்தது உண்மை ஆணைக்குழு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட நிலையில் அது அரச தரப்புச் சட்ட நிபுணர்களால் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. அந்த அறிக்கையில் இறுதிப் போரின்போது இலங்கையின் அரச படையினர் பல தவறுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக நம்பகமாக அறிய வந்தது.

அறிக்கை முப்படையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது என்று உதயனுக்குத் தெரிவித்தது நம்பகமான செய்தி மூலம் ஒன்று. போரின் இறுதிக் கட்டத்தில் படையினரால் தவறுகள் பல மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிக்கை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் நிகழ்ந்த தவறுகள், குற்றங்கள் அனைத்துக்கும், அப்போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகளுமே காரணமாக இருந்தார்கள் என்ற சாரப்பட அறிக்கையின் போக்கு இருப்பதாகவும் உதயனுக்கு அறிய வந்தது.

தனது விசாரணையில் அடையாளம் காணப்பட்ட குற்றச்செயல்கள், தவறுகளுக்குக் காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தித் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் அறிக்கை ஜனாதிபதிப் பரிந்தரைகளை வழங்கி உள்ளது.

படையினர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அறிக்கை முன்வைப்பதால், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்து தற்போது அரச சட்ட நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அறிக்கையால் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் சட்ட விளைவுகள் குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்பார்கள். அதன் பின்னரே அறிக்கையை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கான திகதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply