திபெத் கலாச்சார படுகொலையில் சீனா: தலாய் லாமா
திபெத் இன மக்கள் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவருகின்ற பகுதிகளில் சீனா கலாச்சாரப் படுகொலை செய்துவருகிறது என நாடுகடந்த நிலையில் வாழும் திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் அடக்க்குமுறை காரணமாகவும் திபெத் மக்களின் மோசமான சூழ்நிலை காரணமாகவும் அண்மைய காலங்களில் சிச்சுவான் பிராந்தியத்தில் திபெத்தியர்கள் பலர் தீக்கொளுத்திக் கொண்டுள்ளனர் என்று டோக்கியோவில் உரையாற்றிய தலாய் லாமா கூறினார்.
சீன ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நாள் மற்றும் முன்னாள் புத்த ஆண் துறவிகள் குறைந்தது எட்டு பேரும் பெண் துறவி ஒருவரும் தமக்குத் தாமே தீவைத்துக்கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் பலர் உயிர் இழந்தும் உள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிடுவது தலாய்லாமாதா ஆகவே இந்த உயிரிழப்புகளுக்கு அவரே பழியை ஏற்க வேண்டும் என்று சீனா வாதிடுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply