நீதி கோரி ஜனாதிபதி அன்று ஜெனிவா சென்றார்! அதே பாணியிலேயே நாம் அமெரிக்கா சென்றோம்
ஜே.வி.பி. காலத்தின்போது தமது மக்களுக்காக இன்றைய ஜனாதிபதி சர்வதேச அரங்கிற்குச் சென்று குரல் கொடுத்தார். அது போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்காக நீதிகோரி வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தனர் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ.; பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட குழுவின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழு அன்றைய அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை ஏன் தோல்வி கண்டது. போர் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது.
போர்க் குற்றச்சாட்டுகள் குறித்தோ, காணாமல் போனோர் குறித்தோ ஆராய்ந்து தீர்வு காண முற்படவில்லை.
எனவே, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். எனக் கூறிய அவர் அதுபற்றி மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அலட்டிக் கொள்பவர்கள் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கண்ட தீர்வு என்ன என்பது குறித்துக் கூற முன்வர வேண்டும்.
கூட்டமைப்பினரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அழுது புலம்புவதை விடுத்து இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண இந்தச் சக்திகள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply