கலாமைப் பரிசோதனை செய்ததற்கு அமெரிக்கா வருத்தம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க் விமான நிலையத்தில் வைத்து உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பில் அமெரிக்கா அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.நியூயார்க் விமான நிலையத்தில் அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவும் விமானத்தில் ஏறிய பின்னரும் சோதனை செய்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அதன் பின்னர் கலாமுடைய சப்பாத்தையும், கோட்டையும் அவரிடம் இருந்து சிறிது நேரம் எடுத்துச் சென்றிருந்தனர்.

கலாம் அவர்கள் இவ்வாறான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பில் தில்லி அரசாங்கம் அமெரிக்க அரசுக்கு புகார் தெரிவித்திருந்தது. முக்கியப் பிரமுகர்களை பரிசோதிப்பதற்குரிய சரியான வழக்கங்களை அதிகாரிகள் இச்சம்பவத்தில் பின்பற்றியிருக்கவில்லை என்றும் அந்த தவறுக்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டு அமெரிக்க அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது.

தனது பெயர் முஸ்லிம் பேராக இருந்ததால், அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் விசாரணைக்காக தான் நிறுத்தி வைக்கப்பட்டதாக 2009ல் பிரபல இந்திய சினிமா நட்சத்திரம் ஷாரூக்கானும் புகார் தெரிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply