யாழ்.நகரிலுள்ள விடுதியில் பொலிஸார் திடீர்ப் பாய்ச்சல் இளைஞர், யுவதிகள் உட்பட 12 பேர் சிக்கினர்
யாழ். நகரின் மத்தியிலுள்ள விடுதி ஒன்றை நேற்றுப் பகல் திடீரென சுற்றிவளைத்த பொலிஸார் மூன்று பெண்கள் உட்பட 12 பேரைக் கைது செய்தனர்.பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தலைமை யிலான குழுவினர் இந்தத் திடீர்ப் பாய்ச்சலை நடத்தி இருந்தனர். யாழ். நகரிலுள்ள விடுதிகளில் பாலியல் தொடர்பான குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன என்று கிடைத்துவந்த முறைப்பாடுகளை அடுத்தே யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன் இந்தத் திடீர்ச் சோதனை நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது பெண்கள் மூவர், ஆண்கள் மூவர், விடுதியை நடத்தி வந்தவர், அங்கு பணிபுரிந்தவர்கள் உட்பட 12 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சமன் சிகேரா நேற்றிரவு உதயனுக்குத் தெரிவித்தார். இது குறித்து பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரன் கூறியதாவது:
யாழ். நகரின் மத்தியில் அமைந்துள்ள விடுதி குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து அந்த விடுதி நேற்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.இந்த நடவடிக்கையின் போது முகாமையாளர் பணியாளர்களுடன் விடுதியில் தங்கியிருந்த பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பன்னிருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படுவர் என்றார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply