இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவிற்கும் பிரபாகரனுக்கும் இடையில் 14 மாதங்கள் வரையில் உறவு நீடித்தது
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நோர்வே அரசாங்கத்திடம் உதவி கோரியதாக சமாதான முனைப்புக்கள் குறித்து நோர்வேயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு உதவி கோரியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஏ.சீ.எஸ் ஹமீட், நோர்வே அரசியல்வாதி ஏர்ன் போர்ட்போர்ட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் புலிகள் யுத்த முனைப்புக்களை ஆரம்பித்ததன் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பிரேமதாச நோர்வேயுடன் தொடர்புகளை பேண முயற்சிக்கவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1993ம் ஆண்டு மே மாதம் புலிகள் பிரேமதாசவை படுகொலை செய்தனர். பிரேமதாசவிற்கும் பிரபாகரனுக்கும் இடையில் 14 மாதங்கள் வரையிலேயே உறவு நீடித்தது என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அமைதி காக்கும் படையினர் வாபஸ் பெற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு உதவி வழங்க நோர்வே முன்வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
1999களில் நோர்வே அதிகாரிகள் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோருடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply