நல்லிணக்க ஆணைக்குழு இறுதி அறிக்கை மக்களின் கவனத்துக்கும் கொண்டுவரப்படும் : ஜனாதிபதி
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும். அது பொதுமக்களின் கவனத்துக்கும் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டதையடுத்து ஜனாதிபதி, கடந்த 2010 மே மாதம் 15 ஆம் திகதியன்று 8 பேர் கொண்ட ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.
இவ்வாணைக்குழுவானது 2002 தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான நிகழ்வுகளை ஆராய்ந்து, 5000க்கும் மேற்பட்ட எழுத்து வடிவிலான வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாய்மொழி சார்ந்த வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மட்டுமன்றி, மொனராகல, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் ஆணைக்குழு பயணித்து ஆவணங்களைப் பெற்றுக் கொண்டது. ஆணைக்குழுவானது எதிர்வரும் 19 ஆம் திகதி தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply