தமிழகத்தில் புதிதாக 34 புதிய திட்டங்கள் : ஜெயலலிதா
தமிழகத்தில் காவல்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக 34 புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சென்னையில் நேற்று நடந்து முடிந்த மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, நிறைவுரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:
“காவல்துறை சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருமுயற்சி எடுத்துள்ளேன். நான் உங்களிடம் ஒழுங்கு, சட்டப்படி செயல்படுதல், அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றுதல் ஆகியவற்றை எதிர்பார்க்கிறேன். தேவையில்லாமல் தடியடி பிரயோகம், துப்பாக்கிச்சூடு, லாக்கப் மரணம் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். லஞ்சத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.
பொலிஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட நடத்தை மிகவும் முக்கியம். அவர்களின் செயற்பாட்டுக்கும், அரசின் மதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதுதான் நிர்வாகத்தினுடைய செயற்பாட்டை மக்களுக்கு பிரதிபலிக்கும். தமிழ்நாடு பொலிஸ் இன்னமும் சிறப்பாக செயல்பட்டு, இதர மாநில பொலிசாருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனையடுத்து புதிய திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply