இறக்குமதி செய்யப்படும் யோசனைகள் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது தேசிய மரநடுகை விழாவில் ஜனாதிபதி
எமக்கே உரித்தான வழிமுறைகளைப் பின்பற்றியதால் தான் தாயகம் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலையும் என்னால் வெற்றி கொள்ள முடிந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தீர்வுகளால் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. மாறாக எமது கலாசார பாரம்பரியங்க ளுக்கு அமைவான வேலைத்திட்ட ங்களின் ஊடாகவே எமது சவால்களை வெற்றி கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.
பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தோற்கடித்தது மாத்திரமல்லாமல் சூழலைப் பாதுகாப்பதற்கான சவால்களையும் எமக்கே உரித்தான முறைகளால் தான் எம்மால் வெற்றி கொள்ள முடிந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் பதவி ஏற்பு மற்றும் பிறந்த தினத்தையொட்டி சுற்றாடல் அமைச்சு தேசத்திற்கு நிழல் – தேசிய மரம் நடும் வேலைத் திட்டத்தை நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நேற்று காலை சுபநேரமான காலை 9.01 மணிக்கு பத்தரமுல்லையிலுள்ள ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாம் நாட்டுக்கும், நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காகவும் சிறந்த சேவை செய்கின்றோம். இதனை யிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். நாடு பூராவும் 11 இலட்சம் மரக் கன்றுகள் இன்று நடப்படுகின்றன. இது நாட்டின் எதிர்காலத்திற்குச் சிறந்த பாதுகாப்பாகும். அன்று எமது மூதாதையர் நாட்டிய மரச் செடிகள் தான் இன்று எமக்கு வாழ்வளிக்கின்றது. அதனால் மர நாடுகையை ஒரு பொறுப்பை விடவும் எமது முன்னோர் எமக்கு வழங்கிய கடமையாக் கருதி நாம் செயற்பட வேண்டும்.
நாம் சுற்றாடல் மீது அன்பு செலுத்து பவர்கள். இரக்கம் காட்டுபவர்கள் நாம் காடுகளை பாதுகாத்திருக்கின்றோம். தும்பர, சிங்கராஜ, ஸ்ரீ பாத வனாந் தரங்களைப் பார்க்கும் போது சுற்றாடலுடன் எமக்குள்ள நெருங்கிய உறவு முறையை புரிந்து கொள்ள முடியும்.
எங்களுடைய மரபுரிமைகளின் சக்தியுடன் நாங்கள் உலகின் முன் கெளரவமான சமூகமாக நிமிர்ந்து நிற்கின்றோம். தேசங்களின் கெளரவத்தை எமது நாடு பெற்றுக்கொள்ளுவதற்கு எமக்கு ஆரம்ப காலம் முதல் கிடைக்கப் பெற்றிருக்கும் உயிர் பல் வகைமையும் ஒரு காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாம் ஒற்றுமையையும் ஒழுக்க விழுமியங்களையும் கொண்ட சமூகத்தினர் என்பதை இந்த மரபுரிமை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது. இதற்கு எமது சமயமும் வழிகாட்டுகின்றது.
நாம் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான எண்ணக்கருவை கருத்தில் கொண்ட படிதான் எமது அபிவிருத்தி வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றோம். அதிலிருந்து நாம் வெளியேறவில்லை. நாம் சுற்றாடலுக்குப் பொறுத்தமான வகையில் தான் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம். கொங்கிஅட் காடுகளில் வாழ்வதால் எமக்கு எந்த நன்மையுமே கிடைக்காது.
அண்மைய சார்க் மாநாட்டில் பங்குபற்றிய இந்திய பிரதமர் மாநாடு நடைபெற்ற இயற்கை அழகினால் ஆகர்ஷிக்கப்பட்டு அதற்கேற்பவே உரையாற்றினார். சுற்றாடலை பாதுகாக்கும் பொறுப்பு அன்று பாடசாலை மாணவர்க ளிடையோ அல்லது வேறு அமைப்புகளி டையே தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் சூழல் பாதுகாப்புக்கு அரச பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்து மஹிந்த சிந்தனை முன்வைக்கப்பட்ட காலம் முதல் செயற்படுகின்றோம். அது தொடர்பான கொள்கையை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். மரஞ்செடிகளைப் பாதுகாப்பதும் நாட்டு அபிவிருத்தியின் ஒரு பகுதி என்றே நாம் கருதுகின்றோம். இந்த மரஞ்செடிகள் எமக்கு நல்ல பாடங்களைச் சொல்லித் தந்துள்ளன “நீங்கள் என்னை வாழ வையுங்கள். நான் உங்களை வாழ வைக்கின்றேன்” என்பதே அந்த செய்தி. இந்த சுற்றாடல் செய்தியை எமது பிள்ளைகளுக்கு நாம் புகட்ட வேண்டும். இதனை மறந்து விட வேண்டாம்.
ஆனால் சுற்றாடல் பாதுகாப்பை கருத்தில் எடுக்காது செயற்பட்டதால் உலகம் எவ்வாறான நிர்க்கதியான நிலைக்கு முகம் கொடுத்திருக்கிறது என்பதை எம்மால் பார்க்க முடிகின்றது. சுற்றாடல் எவ்வளவு தூரம் மாற்றமடைந்துள்ளது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
இந்த நாட்டின் உரிமையாளர்கள் என்று கூறுவதற்கு தமது கரங்களால் மரக்கன்றுகளை நடுகின்றவர்களே தகுதியானவர்கள். அதனால் இவ்வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்ளுகின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply