நாடுகடந்த தமிழீழ அரசுக்கு ‘வாரம் 1 டொலர்’ நிதி சேர்ப்பு
புலிகளின் முள்ளிவாய்க்கால் முடிவின்பின் நாடுகடநத தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் புலம்பெயர் தமிழர்களிடம் பாரிய நிதி சேர்ப்பு தொடங்கியுள்ளது.
இலங்கைத் தீவுக்கு வெளியே நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் உயர்அரசியல் பீடமாக விளங்குகின்ற தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விரைவும்படுத்தும் நோக்கில் ‘வாரம் 1 டொலர்’ எனும் முழக்கத்துடன் இவ்நிதி சேர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தமிழீழத்தை இலக்காக கொண்டு நிலத்திலும் புலத்திலும் வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களின் சமூக அரசியல் இருப்பையும் விரித்தியையும் நோக்காக கொண்ட நா.த.அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சகங்களினதும் வேலைத் திட்டங்களுக்கு இந்நிதி சேர்க்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி பயன்படுத்தப்படுமென சொல்லப்படுகிறது.
இத்திட்டம் குறித்து நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடை மூலமமே தனது தொடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான சர்வதேசத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்தை வென்றெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட வேண்டியுள்ளது. இதனை விரைவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் புலம்பெயர் மக்களது நிதிப்பங்கெடுப்பு அவசியமாகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1 டொலரோ அல்லது 1 யூறோவே அந்தந்த நாடுகளின் நாணய பெறுமானங்களுக்கமைய ‘வாரம் தாரீர்’ திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம் எனுவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply