பளையும் பறிபோனது

கிளாலி, முகமாலையில் நிலைகொண்டிருந்த 53ம், 55ம் படையணிகள் இன்று காலை (ஜன.8) பளைப் பிரதேசத்தை மீட்டெடுத்துள்ளனர். தொடர்ந்து இரு படை அணியினரும் சோரன்பற்றை நோக்கி முன்னேறி வருவதாக இராணுவ வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. நேற்றைய தினம் கிளாலி பகுதியில் இருந்த புலிகளின் முக்கிய தளங்களான எக்கோ-9 பேஸ், கொல்ஃப்-7 மற்றும் முகமாலைப் பிரதேசத்தில் இருந்த கட்டளைத்தளங்களான எக்கோ-3 பேஸ், டெல்டா-2 பேஸ் என்பவைகளை கைப்பற்றி 53ம், 55ம் படையணிகள்  கடந்த 24 மணி நேரத்தில் 5கி.மீ முன்னகர்ந்து பளை பிரதேசத்தை இன்று காலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, சுண்டிக்குளம் குடாவில் புலிகளின் கடற்புலித் தளமொன்றை விமானப் படையினர் இன்று காலையில் நிர்மூலமாக்கியதுடன் புலிகளின் படகொன்றின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply