இது போன்ற சிறந்த பட்ஜட் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை: பசில்

மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் அதனூடாக நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வத ற்கு மான இந்த வரவு- செலவுத் திட்டத்தினூடாக மிகவும் முக்கியமான 100 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. துரித அபிவிருத்தியை நோக்கிய 100 முன்மொழிவுகள் உள்ள ஒரு வரவு- செலவுத் திட்டம் போன்று இதுவரை எந்த வரவு- செலவு த்திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.
அபிவிருத்தி, வாழ் வாதாரம் போன்றவற்றை இலக்காகக் கொண்டு 100 முன்மொழிவு களுடன் கூடிய வரவு- செலவுத் திட்டத்தை நோக்கும் போது இது முழுமையான வரவு- செலவுத் திட்டமாகவே கருதுகிறேன் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவிக் கையில் வர்த்தகர்கள், பொதுமக்கள், சிறு உற்பத்தியாளர்கள், விவசாயத்துறையினர், விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப் பினரதும் ஆலோசனைகளை பெற்று அவற்றை நன்கு ஆராய்ந்த பின்னரே இந்த வரவு- செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதி திட்டமிடல் அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தாலும் இதனைத் தயாரித் தவர்கள் பொதுமக்களே. எனவே இந்த வரவு- செலவுத் திட்டம் மக்களின் அபிலாஷைகளைப் பெற்ற மக்களின் வரவு- செலவுத் திட்டம் என்றும் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply