சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி மக்கள் இயக்கம்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் மக்கள் இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முதலாவது கூட்டம் கொழும்பு பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு சகல தரப்பினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னணி அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக எவ்வாறான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்க வேண்டுமென இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக யுத்தம் புரிந்த ஓர் படைத் தளபதியை இவ்வாறு சிறையில் அடைப்பது நியாயமற்றது என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகவும், நாடு முழுவதிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply