வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு தீர்வு காண வேண்டும் : வாசுதேவ

வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் பாராளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் தலையிட்டுத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்போது எம்.பியின் பிரசார ரீதியிலான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் இரண்டு தடவைகள் சுமந்திரன் எம்பியினால் வட பகுதி நிலைமைகள் தொடர்பாக அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் வடபகுதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் உடனடியாக மக்களுக்கு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டியதன் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.எனவே இது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply