யாழ் தினக்குரல் முன்னாள் முகாமையாளர் ஆ.சி. நடராசா காலமானார்
யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலக முன்னாள் பொது முகாமையாளர் ஆ.சி. நடராசா நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை தமது 70 ஆவது வயதில் காலமானார். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரான இளைப்பாறியபின் யாழ் தினக்குரலில் இணைந்து பணி புரிந்தவர். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உரும்பிராயிலுள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை காலமானார். இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் தினக்குரலில் எட்டு ஆண்டுகள் (2002-10) பணிபுரிந்துள்ளார்.
பல்வேறு போட்டிகளையும் நடத்தி மாணவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவித்தவர்.
வன்னிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் “தினக்குரல்’ கருணைப்பாலம் திட்டத்தை ஆரம்பித்து அதன் மூலம் அவர்கள் பல உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகுத்தவர்.
கருணைப்பாலம் திட்டத்தின் மூலம் பலஇலட்சம் ரூபா நிதி திரட்டப்பட்டு அந்த மக்களுக்கு இன்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply