மீள்குடியேற்றப்படாதோர் இன்னும் 7,163 பேர் மட்டுமே

உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுள் மீள்குடியேற்றத்திற்காக இன்று வரை (நவம்பர் 23) 7,163 பேர் மட்டுமே மீதமாக உள்ளனர். இந்த எண்ணிக்கையில் கதிர்காமர் வலயம் – 0 இல், உள்ளூரில் இடம்பெயர்ந்த 3, 221 பேரும், மெனிக் பாம் நிவாரண கிராமத்தின் ஆனந்த குமாரசுவாமி வலயம் – 1 இல் உள்ளூரில் இடம்பெயர்ந்த 3,942 பேரும் உள்ளடக்குகின்றனர். மேலும் இவர்களுள் இன்னும் ஒரு பிரிவினரை நாளை (நவ. 24) மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் பிற மாவட்டங்களை பிறப்பிடமாகக் கொண்டு உள்ளூரில் இடம்பெயர்ந்த 235.900 பேரை அரசு தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றியுள்ளது.

அரசு மனிதாபிமான காரணங்களுக்காக உள்ளூரில் இடம்பெயர்ந்த 27.720 பேரை விடுதலை செய்துள்ளது. அவர்களுள் முதியவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் போன்றோர் உள்ளடக்குகிறனர்.

மேலும் அரசு, யாழ்ப்பாண மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட 9.851 பேரை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றியுள்ளது. இவற்றுள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களும் உள்ளடங்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply