இராணுவத் தலையீட்டால் இந்திய வீட்டுத்திட்டம் தோல்வி

இந்திய அரசினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் தோல்வியடைந்ததற்கு இராணுவத்தினரின் தலையீடுகளே காரணம். பயனாளிகளின் பட்டியல் தயாரிப்பிலும் இராணுவத்தினரின் அங்கீகாரம் பெறவேண்டியுள்ளது. 50 ஆயிரம் வீடுகளில் இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை 50 வீடுகளே கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு, வட மாகாணத்தில் பாலங்கள் கட்டப்படுகின்றன. பெரும் பாதைகளுக்கு காபெற் போடப்படுகின்றன. ஆனால், இன்று அடிப்படை உட்கட்டமைப்பு அவசியம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அரசிடம் பணம் இல்லை எனக் கூற முடியாது. பாலங்களும் பாதைகளும் அமைப்பதற்கு பணம் இருக்கும் என்றால் வீடுகள் இன்றி இன்றும் தற்காலிக கூடாரங்களில் வாழும் எம்மக்களுக்கு ஏன் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முடியாது.

யுத்தத்தின்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு வீடுகளை இழந்தவர்களுக்கு கூரைத்தகடுகளை மட்டும் கொடுத்து விட்டால் மீள்குடியேற்றிவிட்டோம் எனக் கூறமுடியாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply