பாதுகாப்பு தரப்பினரைத் தவிர எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது : மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரையும், காவற்துறையினரை தவிர எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. இராணுவம் தற்போதைய நிலைமையில் சண்டையிடுபவர்கள் என்ற நிலையிலிருந்து பாதுகாப்பாளர்கள் என்ற இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கற்கை நெறிகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போருக்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு உயரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவம் என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். மக்களிடம் இராணுவம் தொடர்பாகக் காணப்பட்ட தோற்றப்பாட்டை மாற்றி வருகிறோம். தற்போதைய நிலைமையில் மக்கள் எம்மை பாதுகாப்பாளர்களாகப் பார்க்கின்றனர். யாழ்ப்பாணத்தில் 99.3 வீதமான பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. பெரும்பாலும் இராணுவமே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply