கோயில் மணியடிக்கத் தடை; பிபிசிக்கு பேசியவர் வீடு தாக்கப்பட்டது

விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் கொண்டாடப்படுகின்ற இந்த வாரத்தில் இலங்கையின் வடக்கே யாழ்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் மணியொலிக்க கூடாது என்று இராணுவம் தடை விதித்துள்ளதாக பிபிசிக்கு தெரிவித்த பிரதேச சபைத் தலைவரின் வீடு தாக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் இராணுவம் இது போன்ற தடையுத்தரவை வழங்கியுள்ளதாக தமிழோசையிடம் நேற்று வெள்ளிக்கிழமையன்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.
எரிவாயு நிரப்பப்பட்ட போத்தல்கள் மூலம் சில நபர்கள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் அதில் அவரின் வீட்டின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தமிழ் தேதிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த சமயத்தில் ஆனைமுகனும் அவரின் தாயாரும் வீட்டில் இருந்துள்ளனர்.

அதேநேரம் இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்டோர் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வித மத சம்மந்தப்பட்ட விடயங்களிலும் இராணுவம் தலையிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply