அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை குழப்பும் சதியில் சில ஊடகங்கள்

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுக்கள் குறித்து எதிர்மறையான செய்திகள் தமிழ்ப் பத்திரிகைகள் சிலவற்றில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காது என்றும், பேச்சுக்களை எப்படியும் சிங்கள மக்கள் குழப்புவார்கள் என்ற விதமான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

கொழும்பிலுள்ள முன்னாள் தமிழ் நீதியரசர் ஒருவரை இந்தப் பேச்சுக்கள் குறித்து தொடர்புகொண்டு கேட்டுள்ள பத்திரிகையொன்று, இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை என்று அவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு இந்தச் பேச்சுக்கள் குறித்துக் கேட்டுள்ள அந்தப் பத்திரிகை, அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப் பகி ர்வை வழங்காது என்றும், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு ஏமாறப் போகிறது என்றும் அவர் கூறியதாக செய்தி வெளி யிட்டுள்ளது. பொதுவாகவே சமாதான முயற்சிகளுக்கு எதிர்ப்பு காட்டிவரும் சில சிங்களத் தீவிரவாத சக்திகளிடம் தற்போதைய பேச்சுக்கள் பற்றிக் கருத்துக் கேட்டு செய்தி வெளியிடுவதன் மூலம், இந்தச் சமாதான முயற்சிகள் வெற்றியளிக் காது என்ற விதமான ஒரு மனநிலை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற அமைப்புகள் தென்னிலங்கையில் முன்னைப் போல் பலமான நிலையில் இன்று இல்லாத போதும், இந்தக் கட்சிகளின் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான கருத்துகளுக்கு இத்தகைய தமிழ்ப் பத்திரிகைகளில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.

இதேவேளை, மற்றுமொரு தமிழ்ப் பத்திரிகையொன்று, “இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கும் என்று யாரேனும் நம்பினால், அது மிகப் பெரும் தவறாகும்” என்று ஆரம்பித்து, அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தும் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க ஒரு நாடகமே என்று சாடும் விதமாக தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply