பிரிட்டன் தூதுவரை வெளியேற்ற ஈரான் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

ஈரானுக்கான பிரிட்டன் தூதுவரை ஈரானை விட்டு வெளியேற்றி அந்நாட்டுடனான இராஜதந்திர, பொருளாதார உறவுகளை குறைத்துக் கொள்ள ஈரான் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

அணு ஆயுத விவகாரம் தொடர்பில் ஈரான் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது தொடர்பில் ஈரான் பாராளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் பிரிட்டனுடனான உறவுகளை குறைத்துக்கொள்வதற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 4 வாக்குகள் மாத்திரமே பதிவானது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply