அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகளை வவுனியாவுக்கு மாற்றுக

மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

“மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதாகக் கூறி சுமார் 65 கைதிகளை திறந்த வெளிக்கு அழைத்துள்ள அதிகாரிகள் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பலரை நிர்வாணமாகவும் தாக்கியுள்ளனர்.
இது கண்டிக்கத்தக்கதாகும்.

இச்சம்பவத்தினைக் கண்டித்து தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிரகாரம் அமைச்சின் ஆலோசகர் கெனடி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். எனினும் கைதிகள் அவரைச் சந்திப்பதற்கு இணங்கவில்லை. பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கைதிகளின் உறவினர்கள் ஊடாக தகவல் தெரிவித்திருந்தோம். அத்தோடு அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகள் நிலவுவதால் தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறும் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply