யாழ். நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்றம் குறித்தும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமெரிக்கத் துணைத்தூதுவர் கத்தரீன் வொன்டி மற்றும் தூதரகத்தைச் சேர்ந்த எமிலி பிளெக்னெல் ஆகியோர் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து உரையாடியுள்ளனர்.

அதன் போது யாழ். மாவட்டத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசின் பங்களிப்பு, மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக அமெரிக்க அதிகாரிகள், அரச அதிபரைக் கேட்டறிந்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் கண்ணிவெடி அகற்றல் தொடர்பாக அவர்களுக்கு அரச அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply