சோரன்பற்று படையினர் வசம் ; A-9 வீதியை முற்றாக விடுவிக்க இன்னும் 9 கி.மீ மட்டுமே!
இராணுவத்தின் 55ம் படையணி இன்று (ஜன.8) மாலை சோரன்பற்றை முற்றாக விடுவித்துள்ளனர். இன்று காலை பளைப் பிரதேசத்தை மீட்ட படையினர் மாலைப்பொழுதுக்குள் பளையிலிருந்து தெற்காக கிட்டத்தட்ட 5.5 கி.மீ முன்னேறி சோரன்பற்று கிராமத்தை அடைந்துள்ளனர். 55ம் படையணி தற்போது நிலைகொண்டுள்ள சோரன்பற்றில் இருந்து 58ம் படையணி அண்மையில் விடுவித்த ஆனையிறவு பிரதேசம் 9 கி.மீ தொலைவில் உள்ளது. 55ம் படையணி தொடர்ந்து யக்கச்சியை நோக்கி முன்னேறிவருவதாக இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. ஆக, ஏ-9 வீதியை முற்றாக விடுவிக்க இன்னும் 9 கி.மீ மட்டுமே உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply