யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா 1,319 கோடி நிதியுதவி
இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு 49 ஆயிரம் வீடுகளைக் அமைத்துக் கொடுக்க 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இடம்பெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கடந்த ஜுன் மாதம் இந்தியா சென்றிருந்த போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க இந்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அங்கு தமிழர்களுக்கு 49 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்துக்கு 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மற்றும் மத்திய, உவா மாகாணங்களிலும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக 38 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். சேதம் அடைந்த 5 ஆயிரம் வீடுகள் பழுது பார்க்கப்படும். ஆதரவு இன்றி தனியாக இருக்கும் பெண்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் வீடுகளை அவர்களாகவே கட்டிக் கொள்ளலாம், வீடு கட்டுவது மற்றும் வீடுகளை பழுது பார்ப்பதற்கான பணம், அந்த பயனாளிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்படும்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசு ஏற்கனவே ரூ.500 கோடி வழங்கி உள்ளது.
வடக்கு பகுதியில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்து உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply