வவுனியாவில் எய்ட்ஸ் நோய் விழிர்ப்புணர்வு ஊர்வலம்
வவுனியா மாவட்ட பாலியல் நோய்கள் எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிர்ப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும் வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.
88 முச்சக்கர வண்டிகள் கலந்து கொண்டு வவுனியா பிரதான வீதிகளில் எய்ட்ஸ் தொடர்பான பதாதைகளை தாங்கி சென்றதுடன் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு கையேடுகளையும் வழங்கி சென்றனர்.
‘எய்ட்ஸ் தொற்றை பூச்சியமாக்குவோம். தொற்றுடையவர்களுக்கு வேறுபாடு காட்டலை தவிர்ப்போம். எய்ட்ஸால் ஏற்படும் மரணத்தை பூச்சியமாக்குவோம்’ என்ற தொனிப்பொருளில் வவுனியா வைத்தியசாலையில் காலை 10 மணிக்கு வைத்தியகலாநிதி கே. சந்திரகுமார் தலைமையில் ஆரம்பமான கருத்தரங்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எம்.மகேந்திரன் உட்பட வைத்தியகலாநிதிகள், பொலிஸார், முற்சக்கர வண்டி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply