அரசு கூட்டமைப்புடன் இன்று மிக முக்கியமான பேச்சு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள பேச்சு மிகவும் முக்கியமானதாக இருக்குமென அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

எந்த அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதென்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமெனவும், அதன் அடிப்படையில் பேச்சுக்கள் தொடருமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று காலை அரச இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விருப்பவில்லையெனவும், எனினும் கூட்டமைப்புடன் பேசி எடுக்கப்படும் தீர்மானங்கள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதிலும், தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கான யோசனைகள் முன் வைக்கப்படுமென அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply