இலங்கை அரசுக்கு இந்தியா உதவ முடியாமல் போகும்.

தமிழர் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக் காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விட யத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும். இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் புரொன்ட்லைன் ஆங்கில சஞ்சிகையில் அதன் கட்டுரையாளர் ஆர்.கே. இராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் 2009-ம் ஆண்டு மே தேடும் வகையில் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு போர் தொடர்பாகவும், 2002ல் தமிழ்ப் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்த பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும்விசாரித்து அறிக்கையிடுவதற்காக ஆணை க்குழு ஒன்றை நியமித்திருந்தது. நவம்பர் 20, மாலை 6.00 மணிக்கு கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதியறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­விடம் கொழும் பில் உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லமான அலரிமாளிகையில் வைத்து கையளித்தது. தற்போது இவ்வாணைக்குழுவால் கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கவனத்திற் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டியுள்ளது. அத்து டன் அனைத்துலக சமூகத்திற்கு தாம் எதையும் மறைக்கவில்லை என்பதையும் காண்பிக்கவேண்டிய தேவை அரசாங் கத்திற்கு உண்டு.

தண்டனை உண்டு

இந்த அடிப்படையில், கற்றுக்கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக் குழுவால் ஆராய்ந்து கண்டறியப்படும் யுத்தக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தானாகவே அறிவித்திருந்தார், ஆனால் இவ் ஆணைக்குழுவானது தனக்காக வரையறுக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கவில்லை. இவ் ஆணைகுழுவின் செயற்பாட்டு விதிமுறை களில் யுத்த குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அனைத்துலக மனித வுரிமை அமைப்புக்களின் கண்டனத்திற்கு இவ் ஆணைக்குழு உள்ளாகியுள்ளது. இவ்வாணைக் குழுயாரும் சாட்சியங் களை முன்வைக்கலாம் என தெரிவித்த போதிலும் இதன் முன் சாட்சியம் அளிப்பதற்கு பலர் மறுத்தனர். இவ் ஆணை க்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை எவற்றைக் கொண்டிருக்கும் என்பது தொடர்பான சாரம்சத்தை இலங்கையில் வெளியிடப்படும் உள்ளூர் ஆங்கிலப் பத்திரிக்கையான சண்டே ரைம்ஸ் நவம்பர் 20 அன்று வெளியிட்டு இருந்தது.

வெளியானது அறிக்கை

இதன் பிரகாரம் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக் கலாம் என நம்பப்படுகின்ற சம்பவ ங்கள் தொடராக ஆராயப்பட்ட 400 பக்கங்களைக் கொண்ட அறிக்கையே தற்போது ஆணைக் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும். கற்றுக்கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவப்படைகளால் தமிழ்ப்புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது இடம்பெற்ற சம்ப வங்களை விசாரணை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருவதாக அமைந்திருக்கும் என சண்டே ரைம்ஸ் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஆணையாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களைக்கொண்டே அவ்வறி க்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், யுத்த மீறல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்கள், குறிப்பிட்ட சம் பவங்கள் தொடர்பான விளக்கம் இவ்வறிக்கையில் காணப்படவில்லை. பிரித்தானியாவின் சனல் 4 தொலைக் காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட வீடியோவில் இராணுவப்படைகளால் மேற்கொள்ளப்பட்டதாக காண்பிக்கப்படும் படு கொலைக் காட்சிகள் அனைத்தும் போலியானவை எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அப்பத்திரி கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு

நாடாளுமன்றில் இவ்வறிக்கை காண்பிக்கப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக் கின்றன. நவம்பர் 21 அன்று ஆரம்பமாகிய வரவு செலவுத்திட்டம் தொடர்பான நாடாளுமன்ற அமர்வின் அடுத்த கட்ட ங்களில் ஆணைக்குழுவின் இவ்வறிக்கையும் நாடாளுமன்றில் காண்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் முதலில் இவ்வறிக்கையை முழுமையாக பரீசிலிக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பிறிதொரு அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பாக பொதுமக்களின் பார் வைக்காக வெளிப்படுத்தப் படும் என ஜனாதிபதி ராஜபக்­ தெட்டத்தெளிவாக தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கீ மூன் இலங்கைக்கு சென்ற போது ஐ.நா விசாரணையயான்றை மேற் கொள்ளுவது தொடர்பான தீர்மானத்தை எடுத் ததன் பின்னர், கடந்த ஆண்டு மே மாதத்தில் ஜனாதிபதியால் கற்றுக்கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக் குழு நிறுவப்பட்டது. இவ் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் பொது வழக்கறிஞர் சீ.ஆர்.டீ.சில்வா செயற்பட்டு ள்ளார்.

40 இடங்களில் 57 கூட்டத்தொடர்

40 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 57 பொதுக்கூட்டத் தொடர்கள், சம்பவம் இடம் பெற்ற 12 குறித்த இடங்களை பார்வை யிட்டமை ஆகியவற்றின் பின்னரே தற்போது ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களை இவ் ஆணைக் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவற்றை விட எழுதப்பட்ட 5 ஆயிரத்து 100 இற்கும் மேற்பட்ட சாட்சி யங்களை இவ்வாணைக்குழு பெற்று அவற்றை ஆராய்ந்து உள்ளது. முற்கூட்டியே தெரியப்படுத்தாத மக்கள் சந்திப் புக்கள் சிலவற்றையும் இவ்வாணைக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச ங்கள் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்கள் போன்றவற்றிலேயே இவ்வாறான சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. தன்னிடம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அவ ற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இவ்வாணைக்குழு வடக்கு, கிழக்குப் பகுதிகள் சிலவற்றுக்கு மீளவும் சுற்று ப்பயணம் செய்துள்ளது.

ஆணைக்குழு கலைக்கப்பட்டது

தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், சட்ட ஒழுங்குகள், நில விவகாரம், சட்டரீதியற்ற ஆயுதக் குழுக்கள், மொழி போன்ற விடயங்களை உள்ளடக்கிய உள்ளகப்பரிந்துரைகளைக் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு செப்டம்பர் 2010 இல் இலங்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து இருந்தது. இவ்வாணைக்குழுவிற்கான தவணை நவம்பர் 15ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.

இலங்கை மீள் இணக்கப்பாடு மற்றும் அமைதி நிலையை கட்டியயழுப்புவதை நோக்காக கொண்டு கற்றுக் கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக்ககுழுவானது தமது விதிமுறைகளின் பிரகாரம் அனைத்துலக மற்றும் உள்ளூர் மட்டங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மே 2009 இல் புலிகள் உத்தி யோக பூர்வமாக தோற்கடிக்கப்பட முன்னர் யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த மாதங்களில் படைகளாலும், தமிழ்ப் புலிகளா லும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் ஏப்ரல் 2011 வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு இப்போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான அனைத்துலக சுயாதீனப் பொறி முறை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என அவ் வல்லுநர்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இலங்கையில் வல்லுநர் குழுவின் அறிக்கை விமர்சிக்கப்பட்டதுடன், இக்குழுவின் தலைவரான மார்சுகி டருஸ்மன் இலங்கைக்கு எதிரான உணர்வுகளை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது டருஸ்மன் அறிக்கை என்பதால் தட்டிக் கழிக்கப்பட் டதுடன், ஐ.நா.அறிக்கையாக இதனை ஏற்றுக்கொள்ளவும் இலங்கை மறுத்துவிட்டது. தமது அறிக்கையை இறுதி யாக்குவதற்கு முதல் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள ஐ.நா வல்லுநர் குழுவினர் தீர்மானித்த போதிலும் இது நடைபெற வில்லை. இவ்வறிக்கையை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்த போதும், ஐ.நா. அமைப்பு இதனை முக்கிய அறிக்கையாக ஏற்றுக்கொண்டது.

இலங்கைக்கான ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதிநிதி நீல் புனே யுத்தம் இடம் பெற்ற பகுதியில் செயற் பட்டவர். உண்மையில்இங்கு என்ன நடந்தது என்பது அவ ருக்கு தெரியும் எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இங்கு செயற்பட்ட வேற்று நாட்டு தூதுவர்களுக்கும் இலங்கையின் நிலைவரம் தொடர்பாக நன்கு தெரியும். இக் குற்றச் சாட்டுக்கள் உண்மையில்லை என்பதை அவர்கள் நன்கு அறிவர் எனவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் கைவிடப்போவதில்லை

இலங்கை மீதான தமது அழுத்தத்தை அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள் கைவிடப் போவதில்லை. இந்தியாவானது இலங்கையுடன் இது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அனை த்துலக அரங்கில் இலங்கையை ஆதரித்தே இந்தியா செயற்பட்டு வருகின்றது. தோராயா ஓபெய்ட்டின் அறிக்கை, இல ங்கை விவகாரத்திற்கு மேலும் பலத்தை சேர்ப்பதாக அமையும். இதனை எதிர்ப்பதென்பது இலங்கைக்கு மிகக் கடின மான விடயமாகும். ஆகவே பிறக்கப்போகும் புத்தாண்டு இலங்கைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க் கப்படுகின்றது. வரும் மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழர்கள் பிரச்சி னைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவிபுரிய முடியாத நிலை தோன்றும். மாதத்தில் முடிபடைந்த நான்காம் ஈழப்போர் தொடர்பாக அனைத்துலக சமூகம் தனது கருத்தை வெளிப்படுத்துவதுடன், இப் போரின்போது மனிதாபிமானத்திற்கு எதிராக இராணுவப் படைகளால் பெரும் எண்ணி க்கையிலான பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டமை தொடர்பிலும் அனைத்துலக சமூகம் தனது கண்டனத்தை மேற்கொண்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply